3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றது வங்காளதேசம்.

அயர்லாந்து, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 45 ஓவராகக் குறைக்கப்பட்டது. அதன்படி, முதலில் பேட் செய்த அயர்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் ஹாரி டெக்டர் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 112 பந்தில் 10 சிக்சர் உள்பட 140 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டாக்ரெல் 47 பந்தில் 74 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, 320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. நஜ்மல் ஹொசைன் சிறப்பாக ஆடி சதமடித்து 117 ரன்னில் அவுட்டானார். தவ்ஹித் ஹிர்தோய் 68 ரன்கள் சேர்த்தார். இறுதியில், ஆட்டத்தின் கடைசி ஓவரில் வங்காளதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்து வென்றது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வங்காளதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.