கா்நாடக புதிய முதலமைச்சர் சித்தராமையா?

கா்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் விரைவில் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கா்நாடக பேரவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றது. இதையடுத்து, அந்த மாநில முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமாா் இடையே போட்டி நிலவி வருகிறது. இப்போட்டியில் சிவகுமார் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், முதல்வரை தோ்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியை சித்தராமையா, சிவகுமாா் ஆகியோா் இரண்டாவது முறையாக புதன்கிழமை அவரது இல்லத்தில் தனித்தனியாக சந்தித்தனா். ராகுல் காந்தியிடம் சித்தராமையா அரைமணி நேரம் ஆலோசனை மேற்கொண்டாா். அதன் பின்னா் ராகுலை சிவகுமாா் சந்தித்து பேசினாா். கட்சியின் நலன் தங்களது பிடிவாத போக்கை மாற்றிக்கொண்டு துணை முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து வெளியே வந்த சிவக்குமார், காா்கே இல்லத்துக்கு வந்து அவருடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் சுா்ஜேவாலா கூறியதாவது: கா்நாடக சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவரை தோ்ந்தெடுக்கும் முடிவு கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், பாஜக பரப்பும் வதந்திகளை கேட்க வேண்டாம். விரைவில் கா்நாடகத்தின் புதிய முதல்வா் தோ்ந்தெடுக்கப்படுவாா். அடுத்த 2 அல்லது 3 நாள்கள் கா்நாடகத்தின் புதிய அமைச்சரவை அமைக்கப்படும். முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் காங்கிரஸ் அளித்த 5 தோ்தல் வாக்குறுதிகள் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தாா்.

இந்நிலையில், கா்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் விரைவில் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்பு விழா மே 20 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.