3 1/2 கிலோ தங்கத்துடன் அலி சப்ரி கட்டுநாயக்கவில் கைது

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மூன்றரை கிலோ தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் இருந்து இன்று காலை கட்டுநாயக்காவுக்கு வந்தடைந்த போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் இருந்து இரண்டரை கிலோ தங்க பிஸ்கட் மற்றும் ஒரு கிலோ தங்க நகைகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஐக்கிய முஸ்லிம் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி இவ்வருடம் பாராளுமன்றத்திற்கு தெரிவானார். தற்போது அவர் கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.