ஆகாஷ் மத்வால் ஒரு ஸ்கிட்டி பவுலர்.

அவருடைய பலங்கள் என்று பார்த்தால், முதலில் அவருடைய accuracy சிறப்பாக இருக்கிறது.

Stump to stump சரியாக வீசி பேட்ஸ்மேன்கள் bat- டை வீசுவதற்கான இடத்தைத் தராமல் நெருக்கடியை உண்டாக்குகிறார்.

இந்த வகையான தாக்குதல் எப்பொழுதும் நல்லது. பந்து வீச்சாளர் எப்பொழுதும் விக்கெட் வாய்ப்பில் இருப்பார். அடுத்து மெதுவான ஆடுகளங்களில் இப்படித்தான் வீசவும் வேண்டும்.

அவருடைய தனிப் பலமாக இருப்பது யார்க்கர். இவர் ஸ்கிட்டி பவுலராக யார்க்கர்க்கு பந்தை வீசும் பொழுது, பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது. இது இவருடைய யார்க்கரை இன்னும் கொஞ்சம் சிறப்பானதாக மாற்றுகிறது.

மேலும் இவருடைய ரன்னிங் ரிதம், பவுலிங் ஆக்சன், வேகம் எல்லாமே சரியாக இருக்கிறது.

மிகக்குறிப்பாக ஒரு பந்துவீச்சாளருக்குத் தனிப்பட்ட புத்திசாலித்தனம் மற்றும் ஆட்ட விழிப்புணர்வு இருக்க வேண்டும். நேற்று பூரன் உள்ளே வந்ததும் வீசிய பந்து, ரன் அவுட்டில் பங்கு கொண்ட விதம் இரண்டும், அவருக்கு இதுவெல்லாம் இருப்பதைக் காட்டுகிறது. பந்துவீச்சு திறமைகள் எவ்வளவு முக்கியமோ இதுவும் அவ்வளவு முக்கியம்.

பேட்மேன்களுக்கு சாதகமாக மாறி உள்ள இந்தநாள் கிரிக்கெட்டில் எல்லா பந்துவீச்சாளர்களுமே, அதாவது கணிப்பதற்குச் சிக்கலான பவுலிங் ஆக்ஷனை கொண்டுள்ள பதிரனா கூட ரன்களை கொடுத்துதான் ஆகவேண்டிய நிலை இருக்கிறது . ஆனால் இதையெல்லாம் தாண்டி போட்டிக்குள் ஏதாவது திருப்புமுனையை உண்டாக்கக்கூடிய பலம் இருக்கிறதா? என்றுதான் பார்க்க வேண்டும். இந்த வகையில் ஆகாஷ் மத்வால் ஏதாவது ஒரு ஓவரில், ஏதாவது ஒரு திருப்புமுனையை உண்டாக்கக்கூடிய பந்து வீச்சாளராகத்தான் இருக்கிறார்!

Leave A Reply

Your email address will not be published.