121 பெற்றோல் நிலையங்கள் 04 நாட்களாக ஓடர் செய்யவில்லை… 50 சதவீத கையிருப்பு பராமரிக்காத அனைத்து பெட்ரோல் நிலைய உரிமங்கள் ரத்து!

50 சதவீத எரிபொருள் இருப்புக்களை பராமரிக்கும் ஒப்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு , போதிய எரிபொருள் இருப்புக்களை பராமரிக்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமங்களை மீளாய்வு செய்யவும், ஒப்பந்தத்தை மீறிய விநியோகஸ்தர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்யவும் தீர்மானித்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில், தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களாலும் ஆர்டர் செய்யப்பட்ட மற்றும் பராமரிக்கப்பட்ட எரிபொருள் குறித்த தரவுகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது மீளாய்வு செய்து வருவதாகவும், அதில் மே 27 முதல் 31 க்கு இடையில் 121 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஆர்டர்களை சமர்ப்பிக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பல பெட்ரோல் நிலையங்கள் குறைந்தபட்ச இருப்புக்களை பராமரிக்க போதுமான ஆர்டர்களை வழங்கவில்லை என்பதை ஆரம்ப அறிக்கைகள் வழியாக அடையாளம் கண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்த விதிமுறைகளின்படி, பெட்ரோலியம் சட்டக் கூட்டுத்தாபனத்தின் பெட்ரோல் நிலையங்கள் குறைந்தபட்சம் 50% இருப்பு வைத்திருக்க வேண்டும், ஆனால் ஒப்பந்த விதிமுறைகளை மீறிய பெட்ரோல் நிலையங்களின் உரிமங்கள் மதிப்பாய்வுக்குப் பிறகு நிறுத்தப்படும் என்றார் அவர்.

பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி நிறுவனம் ஆகியன நாடு முழுவதும் தொடர்ந்து எரிபொருளை விநியோகிக்கும் எனவும், ஞாயிற்றுக்கிழமைக்குள் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் போதுமான எரிபொருள் இருப்புக்கள் கிடைக்கும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.