உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் ரஷிய ராணுவ ஜெனரல் உயிரிழப்பு..?

உக்ரைன்- ரஷியா இடையிலான போரில் கடந்த சில தினங்களாக உக்ரைனின் பதில் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. ரஷியா ஆக்கிரமித்த பகுதிகளை மீட்க உக்ரைன் தீர்மானித்து, உக்கிரமான பதிலடி கொடுத்து வருகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியோடு எதிர்தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த 7 கிராமங்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நேற்று ஒரே நாள் இரவில் உக்ரைன் படைகள் ஜபோரிஜியா பகுதியில் உள்ள பெர்டியன்ஸ்க்கில் ஒரு கிலோமீட்டர் வரை முன்னேறியதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், தெற்கு உக்ரைனில் நடந்த ஏவுகணை தாக்குதலில் ரஷியாவின் மேஜர் ஜெனரல் செர்ஜி கோரியாச்சேவ் கொல்லப்பட்டதாக ரஷிய ஆதரவு வலைத்தள பதிவர்கள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு உக்ரைனில் 35வது படைப்பிரிவை வழிநடத்திச் சென்ற செர்ஜி கோரியாச்சேவ், நேற்று தெற்கு டோனெட்ஸ்க் பகுதியில் நடந்த சண்டையின்போது கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த சண்டையில்தான் உக்ரைன் தனது எதிர்தாக்குதல் மூலம் 4 கிராமங்களை விடுவித்துள்ளது. ராணுவ அதிகாரி கோரியாச்சேவ் இதற்கு முன்பு டிரான்ஸ்னிஸ்ட்ரியா, மால்டோவாவில் அறிவிக்கப்பட்ட ராணுவமயமாக்கப்பட்ட பகுதி மற்றும் தஜிகிஸ்தானில் பணியாற்றியிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.