நாடாளுமன்றத்தை உடன் கலைத்துத் தேர்தலை நடத்துக! – ரணிலிடம் அநுர வேண்டுகோள்.

“நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மொட்டுக் கட்சியினரை விரட்டியடிக்க மக்கள் தயாராகவுள்ளனர். எனவே, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.”

இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி பதவி மீது ஆசை; மொட்டுக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவி மீது ஆசை. இப்படிப் பதவி ஆசை பிடித்தவர்களின் ஆட்சி தற்போது பிளவடைந்துள்ளது.

மக்கள் ஆணையை இழந்த ரணில் – மொட்டு அரசு, பதவி ஆசையில்தான் ஆட்சியில் அமர்ந்தது. இது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இவர்கள் எம்.பியாகப் பதவி வகிக்கக்கூடத் தகுதியற்றவர்கள். எனவே, புதிய மக்கள் ஆணை வேண்டும்; புதிய அரசு வேண்டும். எனவே, நாடாளுமன்றத் தேர்தல் விரைந்து நடத்தப்பட வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.