இயற்கையான முறையில் பாடசாலை அதிபர் கடமை அலுவலகம்.

முல்லைத்தீவு மாவட்டதின் புதுக்குடியிருப்பு அமைந்துள்ள மு/ சிறி சுப்பிரமணிய வித்தியாசாலை எனும் ஆரம்ப பாடசாலையில் உள்ள அதிபரின் கடமை அறை இது ஆகும்.

முற்று முழுதாக மர வேலைப்பாடுகள் மூலம் இயற்கையான முறையில் அமைத்து உள்ளனர்.

பாடசாலை நுழைவாயில் அருகே தனது கடைமை அலுவலகத்தை அமைத்தது மற்றும் இயற்கையான முறையில் அமைத்தது தொடர்பாக அதிபரிடம் வினவிய போது “பாடசாலைக்கு வெளியே இருந்து யார் வருகை தந்தாலும் நேரடியாக தனது கண்காணிப்புக்கு இலகுவாகவும், பாடசாலை மாணவர்கள், ஆசியர்களை கண்காணிக்க இகுவாகவும் உள்ளது” என்றார்.

மற்றும் பாடசாலையில் உள்ளே வகுப்பறைகள் எல்லா வகுப்பறைகளும் மிகவும் நேர்த்தியாகவும் மற்றும் ஸ்டார்ட் வகுப்பறைகளாகவும் அமைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.