கோலாகலமாக ஆரம்பமாகியது டயமன்ஸ் பிறீமியர் லீக் துடுப்பாட்டம்

வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தி வருகின்ற உறவுகளுக்கிடையேயான டயமன்ஸ் பிறீமியர் லீக் துடுப்பாட்ட சுற்றுப்போட்டியானது கடந்த வாரம் வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் வதிரி டயமன்ஸ் விளையாட்டு கழகத்தின் தலைவர் தஇ.சந்திரஹாசன் தலைமையில் சிறப்பாக ஆரம்பமாகியது.

முதன்மை விருந்தினராக சிவன் பவுண்டேசன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தொழிலதிபருமான கணேஸ் வேலாயுதம், இவர்களுடன் வதிரி தமிழ் மன்றத்தின் முன்னை நாள் தலைவர் .தி.வரதராஜன், முன்னை நாள் செயலாளர் இ.அநுராகாந்தன் ,டயமன்ஸ் விளையாட்டு கழக கால்பந்தாட்ட அணியின் முன்னைநாள் அணித்தலைவர்செ.சிவபாலசிங்கம் போன்றோரும் விருந்தினர்களாக அரங்கை அலங்கரித்துக் கொண்டனர். .

Leave A Reply

Your email address will not be published.