கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை…நாளை முக்கிய முடிவு…!

தக்காளி விலை கிலோ ரூ. 130 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தக்காளியை நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும் தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் தக்காளி மொத்த விலை கிலோ ரூ100க்கும், சில்லறை விற்பனையில் கிலோ ரூ.130க்கும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை நடைபெறும் ஆலோசனையில், தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் நியாய விலை கடைகளில் தக்காளியை விற்பனை செய்யலாமா என்பது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.