சென்னையில் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய யூடியூபர் டிடிஎப் வாசன்…!

சென்னையில், யூடியூபர் டிடிஎப் வாசன் ஓட்டி வந்த கார் மோதியதில், இருசக்கர வாகன ஓட்டி காயமடைந்தார்.

யூடியூபர் டி.டி.எப்.வாசன், சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் காரில் பயணித்துள்ளார். அப்போது முன்னாள் சென்ற இரு சக்கர வாகனம் மீது கார் மோதியுள்ளது. இதில் கீழே விழுந்து வாகன ஓட்டி காயமடைந்தார்.

விபத்து காட்சிகளை வீடியோ எடுத்தவர்களிடம் வாக்குவாதம் செய்த டிடிஎப் வாசன், அவசர அவசரமாக ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர் புகார் தராத நிலையில், இந்த சம்பவம் குறித்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். TTF வாசன் மதுபோதையில் விபத்து ஏற்படுத்தினாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.