தனியார் துறையில் பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்.

பட்டதாரி பயிலுனர்களுக்கு தனியார் துறையில் பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் செயற்படுகின்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டம் – 2020 இன் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் கடமைக்காக அறிக்கையிட்ட 267 பட்டதாரி பயிலுனர்களுக்கும் பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் திட்டமிடப்பட்டதான 05 துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

தலைமைத்துவம் மற்றும் அணிச்செயற்பாடுகள்,முகாமைத்துவ பயிற்சிகள், அரச தாபன பயிற்சி,தனியார் தாபன பயிற்சி திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் களப் பயிற்சிகள் ஆகிய துறைகளில் மாவட்டத்தின் 4 பிரதேச செயலகங்களிலும் கடமையினை பொறுப்பேற்ற 267 பயிலுனர்களும் குழுக்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் 05 துறைகளிலும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

பயிற்சிகளினடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற தனியார் வங்கிகள் காப்புறுதி நிறுவனங்கள் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளமை தொடர்பில் தனியார் வங்கிகள் காப்புறுதி நிறுவனங்கள் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் துறைகளின் உத்தியோகத்தர்களுடனான சந்திப் பொன்று 11.09.2020 பிற்பகல் 2.00 மணியளவில் மேலதிக அரச அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பயிற்சிக்கான திட்டமிடலை மேற்கொள்ளும் இராணுவத்தின் 571படைப்பிரிவு அதிகாரிகள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர் எதிர்வரும் திங்கட்கிழமை பயிற்சிக்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.