ரஷியாவில் வெடிபொருள் தொழிற்சாலையில் விபத்து- 6 பேர் உயிரிழப்பு.

ரஷ்யாவின் மத்திய பகுதியான சமாராவில் வெடிபொருள் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ராம்சிந்தெஸ் தொழில்துறை வெடிமருந்துகளின் முக்கிய உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். தொழிற்சாலைக்கு சொந்தமான நிறுவனம் 1997ல் உருவாக்கப்பட்டது.

இந்த தொழிற்சாலையில் 1,300 பேர் பணியில் உள்ளனர். இதேபோல் கடந்த மாதம், மாஸ்கோவின் தென்கிழக்கில் உள்ள டாம்போவ் பகுதியில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். சப்பாயிவெஸ்க் நகரில் உள்ள புராமின்தெஸ் ஆலையில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது. இதில், எட்டு பேர் காயமடைந்தனர். அவர்களில் ஆறு பேர் இறந்தனர்.

பழுதுபார்க்கும் பணியின் போது உபகரணங்கள் அகற்றப்பட்டதன் விளைவாக வெடி விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. உக்ரைனில் தாக்குதல் தொடங்கியதில் இருந்து பல தொழிற்சாலைகள் ரஷ்யாவில் முழு வேகத்தில் இயங்கி வருகிறது என்பது குறுிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.