இனி எவருக்கும் கேபினட் அமைச்சர் பதவி கிடையாது – ரணில்

அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை என அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது 20 கேபினட் அமைச்சர் பதவிகள் உள்ளன.

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சரவை அமைச்சர்கள் பலர் கேட்டபோது, ​​இது பல்வேறு தரப்பினரின் பிரச்சாரம் எனவும், புதிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், அமைச்சரவை அமைச்சர்கள் தற்போது வைத்திருக்கும் அமைச்சு விடயங்களை மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.