தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு…!

நாடு முழுவதும் தக்காளியின் வரத்து குறைந்ததன் காரணமாக தக்காளியின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் தக்காளி விலை உச்சத்தை எட்டியுள்ளது. வட மாநிலங்களிலும் தக்காளி விலை உச்சத்தை எட்டியுள்ளது. பல இடங்களிலும் பவுன்சர்களைப் பாதுகாப்பிற்கு போட்டு தக்காளி விற்கும் சூழலும் நிலவியது.

இந்தநிலையில், ‘கர்நாடகாவில் இருந்து டில்லிக்கு சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள தக்காளியை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி, தெலுங்கானா மாநிலம் அதிதிலாபாத் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விழுந்தது. இதனால் லாரியில் ஏற்றப்பட்டிருந்த தக்காளி சாலையில் சிதறியது.

தக்காளி விலை தற்போது அதிகமாக இருக்கும் காரணத்தால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விபத்தில் சிக்கிய லாரியில் இருக்கும் தக்காளியை அள்ளி சென்று விடுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் தக்காளிக்கு துப்பாக்கிய ஏந்திய போலீசாரை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர். தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ள சம்பவத்தை அந்த பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.