ரஷ்யாவில் வெப்ப நீர் குழாய் வெடிப்பு : 4 பேர் உயிரிழப்பு – 70 பேர் காயம்!

மக்கள் பலர் நேற்று வர்த்தக பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெப்ப நீர் குழாய் இருந்த கொதிக்கும் நீர் அந்த வணிக வளாகத்தின் ஒரு பகுதியில் பரவியது.

இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

20-க்கும் மேற்பட்டவர்கள் அந்த பகுதியில் சிக்கியுள்ளனர்.

இதனை நகர முதல்வர் செர்கே சோபியானின் உறுதிப்படுத்தியுள்ளார். இது பற்றிய காணொளியும் வெளியானது.

வாடிக்கையாளர்கள் மற்றும் வணிக வளாக பணியாளர்கள் ஆகியோருக்கு ஒருபுறம் சம்பவ பகுதியில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

எனினும், மறுபுறம் கட்டிட கதவு பகுதிகளில் இருந்து வெப்பநீர் வெளியேறி வருகிறது.

இதனை தொடர்ந்து, ரஷ்ய புலனாய்வு குழுவினர் குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.