மணிப்பூரில் தொடரும் பதற்றம்: ஊரடங்கு தளர்வு நேரம் குறைப்பு!

மணிப்பூரின் விஷ்ணுபூரில் நேற்றிரவு ஏற்பட்ட கலவரத்தில் தந்தை, மகன் உள்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் புதிதாக கலவரம் வெடித்துள்ளது. இந்த கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீயிட்ட எரிக்கப்பட்டன.

குவாக்டா பகுதியில் கலவரம் நிகழ்ந்துள்ளதால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பல்வேறு பகுதிகளில் அது வாபஸ் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக இம்பால், கிழக்கு, மேற்கு பகுதிகளில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு திரும்பப்பெறப்பட்டுள்ளது.

முன்னதாக, காலை 5 முதல் மாலை 6 மணி வரை தளர்த்தப்பட்ட ஊரடங்கு, நேற்றிரவு நடைபெற்ற கலவரத்துக்கு பிறகு காலை 5 மணி முதல் காலை 10.30 வரை மட்டுமே ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

மேலும், மூன்று காவலருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இம்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.

இந்நிலையில், நேற்றிரவு நடைபெற்ற கலவரத்தில் மேலும் மூவர் பலியான சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.