ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம், உலக அளவில் தங்களுடைய கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

கோவிட் பரவலின் போது ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் கோவிஷீல்டு என்ற தடுப்பூசி மருந்தை தயாரித்தது. ஒருவருக்கு இரண்டு டோஸ் வீதம் நம் நாட்டில் மட்டும் 175 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பக்க விளைவுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும், பலர் மரணம் அடைந்ததாகவும் பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வகையில் 51 வழக்குகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றன.

ரூ.1,047 கோடி இழப்பீடு வழங்க மனுதாரர்கள் கோரி உள்ளனர். இந்த வழக்கில், லண்டன் நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் அளித்த வாக்குமூலத்தில், தாங்கள் தயாரித்த தடுப்பூசி மருந்தால் ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த பாதிப்பு அரிதாக சிலருக்கு ஏற்படலாம் எனக்கூறியுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் தாங்கள் தயாரித்த தடுப்பூசிகளை உலகளவில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வணிக காரணங்களுக்காக இந்த தடுப்பூசியை திரும்ப பெற்றுக் கொள்ளப்படுகிறது.

புதிய வகை கோவிட் திரிபுகளை சமாளிக்கும் வகையிலான புதிய மருந்துகள் வந்துவிட்டது. இனிமேல் இந்த மருந்துகள் உற்பத்தி செய்யப்படாது. பயன்படுத்த முடியாது. முதல்கட்டமாக ஐரோப்பிய யூனியனில் இந்த மருந்து திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், அடுத்தடுத்து உலகளவில் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.