தென்னை மரத்திலிருந்து தவறி வீழ்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை பலி.

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இன்று (06/08/2023) காலை தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த மூன்று பிள்ளைகளின் தந்தை சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார் .

இச் சம்பவத்தில் முழங்காவில் கடற்கரை வீதியைச் சேர்ந்த குணராசா ஞானரூபன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைககப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.