சமூகவலைதளத்தில் முகப்புப் படத்தை மாற்றுங்கள்: மோடி கோரிக்கை!

சுதந்திர நாளையொட்டி சமூக வலைதள பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றுங்கள் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர நாளையொட்டி ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்திற்காக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தங்களின் முகப்புப் படத்தை மாற்ற வேண்டும். நமது நாட்டுக்கும் நமக்கும் உள்ள பிணைப்பை பறைசாற்றும் வகையில் இத்தனித்துவமான முயற்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

நாடுமுழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 76வது சுதந்திர நாள் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தலைநகர் தில்லியில் ராணுவ அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.