இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கம்பஹா, கந்தானைப் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவி, அவரின் வீட்டிலேயே நேற்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த எஸ்.பி.திலினி என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார், பிரேத பரிசோதனையின் பின்னரே அது தொடர்பில் கூற முடியும் என்றும் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரிடமும், சகோதரர்களிடமும் வாக்குமூலங்களைப் பெற்ற பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.