கேரளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்!

கேரள மாநிலம் திருச்சூரில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர்.

இன்று காலை திரிசூர் மாவட்டத்தின் கனிமங்கலம் அருகே தனியார் பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 2 தனியார் மருத்துவமனை மற்றும் திரிசூர் தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை மாநில வருவாய் அமைச்சர் கே.ராஜன் பார்வையிட்டார்.

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.