தர்மனுக்கு மகத்தான வெற்றி : சிங்கப்பூரின் அதிபராக பதவியேற்க உள்ளார் (Videos)

முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூரின் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ளார். வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் திரு தர்மனுக்கு 70.4 விழுக்காடு வாக்குகள் கிட்டின.

திரு தர்மனை எதிர்த்துப் போட்டியிட்ட திரு இங் கொக் சொங்கிற்கு 15.72 விழுக்காடு வாக்குகளும் திரு டான் கின் லியேனுக்கு 13.88 விழுக்காடு வாக்குகளும் கிட்டின என்று தேர்தல் துறை அறிவித்தது.

முடிவுகள் கிட்டத்தட்ட 12.30 மணியளவில் வெளிவந்தன.

மாதிரிக் கணக்கெடுப்பின் முடிவுகள் வெளிவந்தபோது தாமான் ஜூரோங் சந்தையில் ஊடகத்தினருடன் பேசிய திரு தர்மன், சிங்கப்பூர் வாக்காளர்கள் அளித்த ஆதரவு குறித்து உண்மையிலேயே அடக்கத்தை உணர்வதாகக் கூறினார்.

நடப்பு விவகாரங்களை அணுக்கமாகப் பின்தொடர்ந்து அதிபர் தேர்தல் காலக்கட்டத்தின்போது அமைதியுடன் ஈடுபாடு காட்டியதற்காக சிங்கப்பூரர்களுக்கு திரு தர்மன் நன்றி கூறினார்.

போட்டியில் தங்களது முழு முயற்சியையும் சக்தியையும் செலுத்தி மதிப்புமிக்க போட்டியாக்கியதற்காக சக வேட்பாளர்களுக்கும் திரு தர்மன் நன்றி கூறினார்.

தோல்வியைத் தழுவி வாழ்த்திய எதிராளிகள்

மாதிரி கணக்கெடுப்பின் முடிவுகள் வெளிவந்த சிறிது நேரத்தில் போட்டியில் திரு இங் தம் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

திரு தர்மன் தொலைபேசியின் மூலம் தம்மைப் பாராட்டி, துடிப்பான பிரசாரத்தைத் தந்திருந்த தமது குழுவிற்கும் நன்றி தெரிவிப்பதாக திரு இங் கூறினார். பெரும் வெற்றி அடைந்த திரு தர்மனைத் தாமும் வாழ்த்தியதாகக் கூறினார் அவர்.

தேர்தல் முடிவு குறித்து திரு தர்மனை வாழ்த்தியதாகக் கூறிய திரு டான், தேர்தலில் தாம் பெற்ற வாக்குகளைவிட கூடுதலாக எதிர்பார்த்திருந்ததாகக் கூறினார். ஆனாலும் தேர்தல் என்று வரும்போது நிச்சியமின்மை இருக்கும் என்று நினைப்பதாக அவர் மேலும் சொன்னார்.

செப்டம்பர் 14ஆம் தேதி திரு தர்மன் அதிபராகப் பதவிப்பிரமாணம் செய்யப்படுவார் எனப் பிரதமர் லீ சியன் லூங் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

தர்மன் அவர்களது வாழ்கை பின்னணி

தர்மன், 19 ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பல தலைமுறை சிங்கப்பூரர் ஆவார். மூன்று குழந்தைகளில் ஒருவரான தர்மன், சிங்கப்பூர் புற்றுநோய் பதிவேட்டை நிறுவி, புற்றுநோய் ஆராய்ச்சி தொடர்பான பல சர்வதேச நிறுவனங்களுக்கு தலைமை தாங்கிய “சிங்கப்பூரில் நோயியலின் தந்தை” என்று அழைக்கப்படும் மருத்துவ விஞ்ஞானி மற்றும் நோயியல், எமரிடஸ் பேராசிரியர் கே. சண்முகரத்தினம் என்பவரின் மகன் ஆவார்.

தர்மன், சீன-ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் வழக்கறிஞரான ஜேன் யுமிகோ இட்டோகியை மணந்தார், அவர் அவரை விட 3 வயது மூத்தவர்.அவர் சிங்கப்பூரில் சமூக நிறுவனங்களிலும் இலாப நோக்கற்ற கலைத் துறையிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தர்மன் தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.

தர்மன் தனது இளமை பருவத்தில் ஒரு சுறுசுறுப்பான விளையாட்டு வீரராக இருந்தார், மேலும் விளையாட்டு வாழ்க்கைக்கு பாடங்களை புகுத்தும் விதத்தை எடுத்துரைத்துள்ளார். 2013 இல் சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் கவுன்சிலால் வெளியிடப்பட்ட கேம் ஃபார் லைஃப்: 25 ஜர்னிஸ் என்ற புத்தகத்தில் விளையாட்டைப் பற்றி அவர் எழுதியுள்ளார், “பண்புக்கான ஒரு பெரிய ஒப்பந்தம்… குழந்தைகள் அணிகளின் மதிப்பைக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்கிறார்கள். மீண்டும் மீண்டும் பயிற்சி, மற்றும் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ள வேறு வழியில்லை. மேலும், போட்டியில் விழுந்து அல்லது தோல்வியடைந்து தன்னைத்தானே பணிவுடன் உயர்த்திக் கொள்ளும் திறன் விளையாட்டில் இருந்து வருவது… .” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரின் சீன-மொழி வல்லுனரும் கூட. பல கலாச்சார நாடான சிங்கப்பூரின் பண்பை பேணி வாழ்ந்த ஒருவர் தர்மன்.

Leave A Reply

Your email address will not be published.