அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வருவதில் சிக்கல்!

டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வருவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜி 20 மாநாட்டை முன்னிட்டு தலை நகர் டெல்லியில் தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளதால் அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து, கனடா, சவுதி அரேபியா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் தலைவர்களுக்கு மாநாட்டில் பங்கேற்க இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் சீன அதிபர் ஜின் பிங் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு பதிலாக சீன வெளியுறவுத் துறை செயலாளர் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை மறுநாள் டெல்லி வருவதாக அறிவித்திருந்தார். மேலும் இந்த பயணத்தை ஆவலுடன் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜோ பைடனுக்கு கொரோனா நெகட்டி என வந்திருந்தாலும் அவருக்கு, நாள் தோறும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வருகிற 9 மற்றும் 10 தேதிகளில் டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.