ஆசிய கோப்பை – 21 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி.

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெறுகிறது. சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி இருந்தது. இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், வங்காளதேசமும் மோதின.

டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்தது. சமர விக்ரமா அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 93 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். பதும் நிசாங்கா 40 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது,ஹசன் மமுத் தலா 3 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் தவ்ஹித் ஹிருடோய் பொறுப்புடன் ஆடி 82 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில், வங்காளதேச அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் தீக்ஷனா, தசுன் சனகா, பதரினா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.