பல்கலைக் கழக பகிடிவதைகள் (ராக்கிங்) பற்றி புகாரளிக்க ஒரு எண் 1997

நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களின் மீது நடத்தும் பகிடிவதை மற்றும் சித்திரவதைகள் தொடர்பான தகவல்களை அறிவிப்பதற்காக, சிறப்பு தொலைபேசி எண் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத் தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் செயல்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

076 54 53 454 என்ற தொலைபேசி எண்ணுக்கு நீங்கள் WhatsApp செய்தி, வீடியோக்கள் அல்லது புகைப்படங்களை அனுப்பலாம்.

1997 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கும் இது தொடர்பில் அறிவிக்க முடியும் என ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.