ரூ.3 சில்லறை தராத ஜெராக்ஸ் கடைக்காரர்: ரூ.25,000 இழப்பீடு வழங்க சொன்ன நீதிமன்றம்

இந்திய மாநிலம், ஒடிசாவில் ரூ.3 சில்லறை தராத ஜெராக்ஸ் கடைக்காரருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரஃபுல்ல குமார் தாஷ். இவர், கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி சம்பல்பூர் பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றுள்ளார். அங்கு, ரூ.5 கொடுத்து ஜெராக்ஸ் எடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.

பின்பு, ஜெராக்சின் விலை ரூ.2 எடுத்துக்கொண்டு மீதி சில்லறை காசு ரூ.3 கேட்டுள்ளார். அதற்கு அந்த கடைக்காரர், ‘பிச்சைக்காரன் கூட ரூ.3 வாங்கமாட்டான்’ என்று அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, கடைக்காரர் ரூ.5 திரும்ப கொடுத்து, பிச்சைக்காரருக்கு நன்கொடையாக கொடுப்பது போல நினைத்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இதனால் மன அழுத்தமடைந்த பிரஃபுல்ல குமார் தாஷ், காவல்துறையிடம் சென்று கடைக்காரர் மீது புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக் கொண்ட பொலிசார் கடைக்காரர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு, நுகர்வோர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், சில்லறை காசு ரூ.3 திருப்பிக் கொடுக்காததாலும், அவமானப்படுத்தியதாலும், கடைக்காரர் ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.