தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் திடீர் மோதல்.

பாகிஸ்தானில் பிரபல தொலைக்காட்சியில் நேரடியாக நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசியல் விமர்சகர்கள் திடீரென தங்களுக்குள் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பிரபல தொலைக்காட்சி சார்பில் விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் இம்ரான்கானின் சட்டத்தரணி ஷெர் அப்சல் கான் மார்வாட், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் அப்னான் உல்லா கான் என முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் இருவர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி தொடங்கி நேரலையில் ஒளிபரப்பானது. அப்போது முன்னாள் பிரதமர் இம்ரான்கானை யூதர்களின் முகவர் என உல்லா கான் விமர்சித்தார். இதனால் அப்சல்கானுக்கும், அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சமூகவலைதளங்களில் வைரலாக இந்த வாக்குவாதம் முற்றியதில் திடீரென அப்சல்கான் எழுந்து உல்லாகானை சரமாரியாக தாக்கினார். இதனையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஓடிச்சென்று அவர்களை சமாதானப்படுத்தினர். இதுகுறித்த காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.