நிச்சயம் குறித்து பேசிய இளம்பெண் அடுத்த நாளே மரணம்!

சிங்கப்பூரில் ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரலில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி 23 வயது பெண் உயிரிழந்துள்ளார்.

எதிர் வரும் டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த நிலையில் இந்த சோகமான நடந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த இந்த சம்பவத்தில், அந்த பெண் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.

நூர் அஃபியா ஹிஷாம் என்ற அந்த பெண் கடந்த சனிக்கிழமை மாலை தனது வருங்கால கணவர் முகமத் ஃபௌசன் முஹத் மஸ்ரியை சந்தித்துள்ளார்.

“விபத்து நடந்த முந்தைய இரவு நான் நூர் அஃபியாவை சந்தித்தேன். மேலும் சில நாட்களுக்கு முன்பு, எங்கள் நிச்சயதார்த்தம் பற்றி நாங்கள் கலந்து பேசினோம்” என்று முகமத் ஃபௌசன் விபத்து நடந்த ஒரு நாள் கழித்து கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.