தங்கம் வென்ற தருஷிக்கு சஜித், அநுர வாழ்த்து!

“சீனாவில் நடைபெற்றுவரும் 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 21 வருடங்களின் பின்னர் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் எமது நாட்டுக்குத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்த தருஷி கருணாரத்னவுக்கு இந்த அதியுயர் சபையில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றும்போது தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“வீராங்கனையை இந்தத் துறைக்குக் கொண்டு வந்த கண்டி வளல ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயத்துக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஆசியா விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், மகளிருக்கான 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கமும், ஆடவருக்கான 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்ற அனைத்து இலங்கை வீரர்களுக்கும் நானும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.