மும்பையில் பயங்கர தீ விபத்து: 7 பேர் பலி..!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கோரிகான் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். 39 பேர் காயமடைந்தனர்.

மீட்புப் பணிகளின்போது தீக்காயங்களுடன் 46 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டாதாகவும், அதில் 7 பேர் பலியாகவிட்டதாகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெய் பவானி கட்டடத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றியதாகவும், இது அருகில் இருந்த பகுதிகளுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது.

தீக்காயம் அடைந்த 39 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.