மின்சாரத்தை துண்டிக்கப் போன அதிகாரிகளை மண்டியிட வைத்து அடி – உதை.

மதுரங்குளி , முக்குதொடுவாவ பிரதேசத்தில் மின்சாரத்தை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் இருவர் மீது மணல் வியாபாரி உள்ளிட்ட சிலர் தாக்கியதால் , தாக்குதலுக்கு உள்ளானோர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

இலங்கை மின்சார சபையின் புத்தளம் மின்சார அதிகாரசபை அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் இருவர் மின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது .

கடந்த ஒரு மாதமாக மின்கட்டணம் செலுத்தாததால், வியாபாரியின் வணிக இடத்தில் இருந்த மின்சாரத்தை துண்டித்து விட்டு , புறப்பட ஆயத்தமான போது , அவர்களை மண்டியிட வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது .

மின் இணைப்பை துண்டிக்கும் முன், அந்த இடத்தில் இருந்த பெண் ஒருவரிடம் தெரிவித்து விட்டே மின் இணைப்பை துண்டித்ததாகவும், பில் செலுத்திய பின் மீண்டும் வந்து மின்சாரம் வழங்குவதாக கூறியதாகவும், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற மின் துண்டிப்பு பணியாளர்கள் இருவரும் தெரிவித்தனர் .

குறித்த வர்த்தகர் மற்றும் அவரது ஊழியர்களால் தாக்கப்பட்ட மின்சாரம் துண்டிக்க வந்த அதிகாரிகளில் ஒருவருக்கு மூக்கில் பலத்த காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது . அந்த அதிகாரிக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

இந்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சந்தேக நபர்களை கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.