அதற்கு கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம் – வாட்ஸ்அப் உறுதி

வாட்ஸ் அப் செயலியின் பிரதான பாதுகாப்பு அம்சமான end-to-end encryption முறையை உடைக்க மத்திய அரசு விரும்பினால், இந்தியாவில் இருந்து வெளியேறுவோம் என வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்தது, தேசிய அளவில் பேசு பொருளாக உருவெடுத்துள்ளது.

மத்திய அரசு கடந்த 2021ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், அந்த சட்டம், தங்களது பயனர்களின் உரையாடல் மற்றும் விவரங்களை கண்காணிக்கவும், அவற்றை கவனிக்கவும் நிர்பந்திப்பதாக வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. அதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் புதிய ஐ.டி. சட்டத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மெட்டா நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் வழக்கு விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் கரியா, Whatsaapp-ன் பிரைவசி அம்சத்திற்காகவே இந்தியாவில் 40 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் அதனை பயன்படுத்துவதாக தெரிவித்தார். உலகின் வேறு எந்த நாடுகளிலும் இதுபோன்ற சட்டம் அமலில் இல்லை என்றும் வாட்ஸ்-அப் தரப்பு வழக்கறிஞர் கூறிய நிலையில், தென் அமெரிக்காவில் கூட இல்லையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அதிக வாட்ஸ் அப் பயனாளர்களை கொண்டுள்ள பிரேசிலில் கூட இல்லை என பதிலளித்தார் வழக்கறிஞர் தேஜஸ் கரியா.

மேலதிக செய்திகள்

88-89 JVPயால் கொல்லப்பட்டோர் , பெண் பித்தர்கள், கள்ள சாராயம் காச்சியோர் , திருடர்கள்..- நளின் ஹெவகே (Video)

அமைச்சரவையில் இருந்து விஜயதாஸவை நீக்குங்கள்! – ஜனாதிபதியிடம் மொட்டுக் கட்சி மீண்டும் கோரிக்கை.

பேர்ஸ்டோவ் சதம்,262 ரன்னை விரட்டிய பஞ்சாப் அணி சாதனை வெற்றி பெற்றது.

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

Leave A Reply

Your email address will not be published.