7 நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணங்கியுள்ளது.

காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (26) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

இதன்படி, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாகவும் மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது:

விசா விவகாரம் குறித்து அமைச்சரவையில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. விசா அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​​​30 நாள் ஒற்றை நுழைவு விசா கணினியில் கிடைக்கவில்லை என்பது சிக்கல். அது ஒரு நடைமுறைச் சிக்கலாக இருந்தது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து நிதிக்குழு அறிக்கை அளித்திருந்தால், நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கலாம். 7 நாடுகளுக்கு விசா இலவசம். 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு நிலுவையில் உள்ளது.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பேசும் போது , விசாவிற்கு 5100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இலவச விசா கொடுத்தாலும் அவர்களின் முறையை பின்பற்ற வேண்டும். தரவுகள் பதியப்படுகிறது. ஒரு நாடாக, சுற்றுலாத் துறையில் நாம் நல்ல இடத்தில் இருக்கிறோம். இலவச பயண விசா வழங்க வேண்டும். குறைந்தது இரண்டு மாதங்களாவது அப்படி கொடுப்பதாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

“இது அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து நிறைவேற்றியது” என எதிர்க் கட்சி கிரியெல்லவின் கேள்விக்கு அமைச்சர் டிரான் கீழ் கண்டவாறு விபரித்தார்,
நவம்பர் 21, 2023 அன்று, விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த ஆலோசனைக் குழு இருந்தது. நவம்பர் 23 அன்று பாராளுமன்றம் நிறைவேற்றப்பட்டது. நவம்பர் 27ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. நவம்பர் 23ஆம் தேதி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் வாக்கெடுப்பு இல்லாமல் இதை நிறைவேற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.