யாழில் ரயில் தண்டவாளத்தில் வீழ்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

ரயிலில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் வீழ்ந்து காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ். சங்கத்தானை, சாவகச்சேரியைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான மாணிக்கம் விஜயரட்ணம் (வயது – 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு தச்சன்தோப்பு ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறிய போது தவறி தண்டவாளத்தில் வீழ்ந்துள்ளார்.

அவர் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்ட நிலையில் நேற்றுப் பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசரணைகளை மேற்கொண்டு பிரதே பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.