மாங்குளம் புகையிரத நிலைய நூலகம் திறந்து வைப்பு.

மாங்குளம் புகையரத நிலைய நூலகம் (15.10.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நூலகத்திற்காக முதல் தொகுதியாக 130 புத்தகங்கள் சிறகுகள் படிப்பகம் நிகழ்ச்சி திட்டம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த புகையிரத நிலையத்தின் நீர் சுத்திகரிப்பு தொகுதி BBK நிறுவனத்தினரின் அனுசரணையிலும், பசுமையாக்கல் பணியாக நிலைய சூழலில் மரநடுகை பணி Green Layer அமைப்பினராலும் மேற்கொள்ளப்பட்டது. நூலகத்திற்கான அலுமாரியும் BBK நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

வாசிப்பினை ஊக்குவிக்கும் வகையிலான அனைத்து நடவடிக்கைகளினையும் மேற்கொள்வதில் உறுதுணையாக செயலாற்றுவோம்.

குறித்த புத்தகங்கள் சிறகுகள் புத்தக சேகரிப்பு ஊடாக பல்வேறு பிரதேசங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு பட்டவையாகும்.

Leave A Reply

Your email address will not be published.