உலககோப்பை கிரிக்கெட் ஆஸி அதிரடி வெற்றி’..

உலகக் கோப்பை 14ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகள் லக்னோ மைதானத்தில் மோதின. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி, இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், இலங்கை அணி 151/1 என்ற வலுவான துவக்கத்தை தந்தது. இருப்பினும், ஆஸ்திரேலிய அணி அதிரடியாக கம்பேக் கொடுத்து 209 ரன்களில் இலங்கை அணியை சுருட்டியது.

லக்னோ மைதானம் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிற்கும் சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இலங்கை அணி ஓபனர்கள் பதும் நிஷங்கா, குஷல் பெரேரா இருவரும் தொடர்ந்து மிரட்டலாக விளையாடி அசத்தினார்கள். நேற்று ஆப்கானிஸ்தான் அணி ஓபனர்கள் 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், இன்று இலங்கை அணி ஓபனர்கள் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால், இலங்கை அணி வெற்றியைப் பெற்றுவிடுமோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இலங்கை அணி ஓபனர்கள் அரை சதம் கடந்து விளையாடி வந்த நிலையில், பதும் நிஷங்காவை 61 (67) பாட் கம்மின்ஸ் வீழ்த்தினார். தொடர்ந்து குஷல் பெரேராவும் 78 (82) கம்மின்ஸிடம் சரண்டைந்தார்.

இலங்கை ஓபனர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தப் பிறகு, 5ஆவது இட பேட்டர் அசலங்கா 25 (39) மட்டுமே இரட்டை இலக்க ரன்களை அடித்தார். மற்ற யாரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. கேப்டன் குஷல் மெண்டிஸ் 9 (13), சமரவிக்ரமா 8 (8), தனஞ்ஜெயா டி சில்வா 7 (13) போன்ற பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர்.

இதற்கு முக்கிய காரணம் ஆடம் ஜம்பா தான். 3, 4ஆவது இட பேட்டர்கள் மெண்டிஸ், சமரவிக்ரமா விக்கெட்டை எடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி அழுத்தங்களை போட்டார். இதனால்தான், இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து சொதப்பியது.

இறுதியில், இலங்கை அணி 43.3 ஓவர்கள் முடிவில் 209/10 ரன்களை மட்டும்தான் எடுத்தது. ஆடம் ஜம்பா 4/47 விக்கெட்களை கைப்பற்றினார். பாட் கம்மின்ஸ் 2/32 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் 2/43 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

210 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலிய அணி அசால்ட்டாக துரத்தி வெற்றியைப் பெற்றுவிடும் எனக் கருதப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய அணியோ இந்த இலக்கை 5 விக்கெட்களை இழந்துதான் எட்டியது. துவக்கத்தில் டேவிட் வார்னர் 11 (6), ஸ்டீவ் ஸ்மித் 0 (5) ஒருவரும் மதுஷங்காவின் ஒரே ஓவரில் ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். இருப்பினும், அதன்பிறகு மிட்செல் ஸ்டார்க் 52 (51), லபுஷேன் 40 (60), ஜோஷ் இங்கிலிஸ் 58 (59) ஆகியோர் மிரட்டலாக விளையாடினார்கள்.

இறுதிக் கட்டத்தில் மேக்ஸ்வெல் 31 (21), ஸ்டாய்னிஸ் 14 (8) ஆகியோர் களத்தில் இருக்கும்போது, ஆஸ்திரேலிய அணி 35 ஓவர்களில் 210/5 ரன்களை எடுத்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.