கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது.

கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது என நியுயோர்க்கில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கனடா இந்திய இராஜதந்திர முறுகல் நிலை குறித்து கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அலிசப்ரி உறுதியான ஆதாரங்கள் இன்றி இந்தியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தமைக்காக கனடா பிரதமரை கடுமையாக சாடியுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதாரமற்ற பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர் என்பதால் அவரது கருத்துக்கள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

சில பயங்கரவாதிகள் கனடாவில் அடைக்கலம் பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் ஆதாரங்கள் அற்ற கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சுபாவம் கனடா பிரதமருக்குள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்திலும் கனடா பிரதமர் அவ்வாறு நடந்துகொண்டார் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக பெரும் பொய்யை சொன்னார் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பதுஅனைவருக்கும் தெரியும் எனவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளது என்ற கனட பிரதமரின் குற்றச்சாட்டினால் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலை உருவாகியுள்ள நிலையிலேயே இலங்கை வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.