திருடு போன மொபைல் போன்… 15 நிமிடத்தில் ரூ.42 ஆயிரம் பணத்தையும் இழந்த நபர்

நாடு முழுவதும் கொலை, கொள்ளை உள்பட சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்ன தான் இதைத் தடுக்கும் விதமாக காவல்துறையினர் தரப்பிலிருந்து பல எச்சரிக்கைப் பதிவுகள் வந்தாலும் அதை எதையும் நாம் முறையாக கண்டுக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

இந்நிலையில் கொல்கத்தாவில் மர்ம நபர் ஒருவர், பேருந்தில் பயணித்த நபரின் மொபைலைத் திருடியதோடு, அடுத்த 15 நிமிடங்களில் மொபைலின் மூலம் 42 ஆயிரம் பணத்தையும் திருடியள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், என்ன நடந்தது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

கொல்கத்தாவில் கெஸ்டோபூர் பகுதியில் வசித்து வருபவர் சங்கர் கணேஷ். வழக்கம் போல அலுவல் பணிகளை முடித்து விட்டு இரவில் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது மிகவும் பிஸியாக மெசேஜ் டைப் செய்துக்கொண்டிருந்த போது அருகில் இருந்த மர்ம நபர் ஜன்னல் வழியாக மொபைலை பறித்துச் சென்றுள்ளார். இதையடுத்து பதிய மொபைல் மற்றும் புதிய மொபைல் நம்பரை வாங்கி பயன்படுத்தியுள்ளார். அப்போது தான் மொபைல் திருடப்பட்ட அடுத்த 15 நிமிடங்களில் அவரது மொபைலின் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் 42 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்த சங்கர் கணேஷ், தன்னுடைய மொபைலைப் பறித்துச் சென்றதோடு, பணத்தைப் திருடியதாகவும் இதுக்குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார் . வழக்குப் பதிவையடுத்து காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது வங்கி அதிகாரிகள் சரியான கடவுச்சொல் (PIN) மற்றும் மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபியை உள்ளீடு செய்து தான் பணத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து மொபைல் திருடப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவியை கேமிராவை ஆய்வு செய்து யார் அந்த நபர்? என்பது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் எச்சரிக்கை:

ஒவ்வொரு நாளும் புதுவிதமான திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் நூதன முறையில் சைபர் கிரைம் தொடர்பான குற்றங்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது. எனவே தான் இதுப்போன்ற குற்றங்களைத் தடுக்க போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் சோசியல் மீடியாவின் வாயிலாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக பொது இடங்களில் உங்கள் மொபைல் லாக் மற்றும் ஜீபே (gpay) போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகளின் கடவுச்சொல்லைப் பயன்படுத்தாதீர்கள் என்றும் அதற்கு மாற்றாக பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்துங்கள் என்கின்றனர். மேலும வங்கியிலிருந்து பேசுவதாக வரும் அழைப்புகளுக்கு எவ்வித பதிலும் அளிக்க வேண்டாம் என்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.