50 கோடி கையெழுத்து வாங்குனாலும் நீட்டை ஒழிக்க முடியாது – உதயநிதியை சாடிய பிரேமலதா!

நீட்டை நிச்சயம் ஒழிக்க முடியாது என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வை ஒழிக்க முடியாது. குப்புறம் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக,

நீட்டை ஒழிப்போம் என்று சொன்னதற்காக உதயநிதி ஸ்டாலின் அதையே பிடித்துக் கொண்டு தொங்கி கொண்டு இருக்கிறார். ஒரு கையெழுத்தில் அது நிறைவேறவில்லை. இப்போது 50 லட்சம் கையெழுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறார்.

அதுவும் நிறைவேற போவது இல்லை. 50 கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட்டை நிச்சயம் ஒழிக்க முடியாது. நீட் முதலில் வரும் போது வேண்டாம் என்றுதான் நாங்களும் சொன்னோம். ஆனால், இந்தியா முழுவதும் நீட் தேர்வு உள்ளது. நீட் வேண்டும் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். மாணவர்களை தயவு செய்து குழப்பாதீர்கள்.

எல்லா மாணவர்களும் தேர்வு எழுத தயாராகிவிட்டார்கள். இன்னும் ஒரு வருடம் இரண்டு வருடத்தில் பாருங்கள். இந்தியாவிலேயெ அதிக மதிப்பெண் ஜெயிக்க போவது தமிழ்நாட்டு மாணவர்களாகத்தான் இருப்பார்கள். எனவே சரியாக அவர்களை வழி நடத்த வேண்டும் என்று கேட்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.