ஹமாஸுடன் போர் நிறுத்தம் செய்ய முடியாது : இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸாவின் போர்நிறுத்தக் கோரிக்கையை நிராகரித்து, அது ஹமாஸிடம் சரணடைவதற்கு சமம் என தெரிவித்துள்ளார்.

டெல் அவிவில் பேசிய நெதன்யாகு பைபிளை மேற்கோள் காட்டி, “இது போருக்கான நேரம்” என்றார்.

இதற்கிடையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கான கோரிக்கையை ஐ.நா உதவி நிறுவனங்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

காசாவின் நிலைமை மணிக்கணக்கில் மோசமடைந்து வருகிறது, மேலும் “இங்குள்ள உண்மையான இழப்புகள் குழந்தைகளின் வாழ்க்கையில் அளவிடப்படுகிறது” என UNICEF தெரிவித்துள்ளது.

1,400 பேரைக் கொன்று , குறைந்தது 239 பணயக் கைதிகளைப் பிடித்த ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் அக்டோபர் 7 முதல் காசா பகுதியில் குண்டுவீசி போர் தொடுத்து வருகிறது.

காசாவில் உள்ள ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இஸ்ரேலின் பதிலடி குண்டுத் தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்து 8,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) வடக்கு காசா பகுதியில் டாங்கிகளைப் பயன்படுத்தி “இலக்குகளை நோக்கிய சோதனைகளை” நடத்தி வருகின்றன.

இஸ்ரேல், காசா மீதான தனது எதிர்பார்க்கப்பட்ட தரைப்படை ஆக்கிரமிப்பை இன்னும் தொடங்கவில்லை எனவும், ஆனால் இந்த தாக்குதல் “அடுத்த கட்ட சண்டைக்கான தயாரிப்பு” எனவும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) பல மணிநேர சோதனைகளில் இஸ்ரேலியர்களின் உயிரிழப்புகள் ஏதுமின்றி “பயங்கரவாதிகளை ஒழித்துவிட்டதாக” கூறுகிறது.

காசா மீது படையெடுக்க இஸ்ரேல் தயாராகிறது ஆனால் எப்போது என்று கூறமாட்டேன் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா பகுதியில் தரைப்படை ஆக்கிரமிப்புக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகவும், ஆனால் அது எப்போது நடக்கும் என்று கூறப்போவதில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

“இது ஆரம்பம் மட்டுமே” என இஸ்ரேலிய பிரதமர் டெல் அவிவில் இருந்து தொலைக்காட்சியில் பேசும் போது தெரிவித்தார்.

இதற்கிடையில், காசா பகுதியில் எரிபொருள் தீர்ந்துவிட்டதால், மருத்துவமனை அவசர சேவைகள் தவிர அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. காசா பகுதிக்கு எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் தடுத்துள்ளது, அதேசமயம் ஹமாஸ் எரிபொருளை பதுக்கி வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காஸா பகுதியில் உள்ள தனது மனிதாபிமான நிறுவனமும் இதேபோன்ற எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாகவும், இதனால் அடுத்த சில மணித்தியாலங்களில் அதனை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் குறித்து செவ்வாயன்று தனது அறிவிப்புக்கு பதிலளித்ததன் மூலம் “அதிர்ச்சியடைந்ததாக” கூறினார்.

காசாவில் ‘மனிதாபிமான சட்டம் தெளிவாக மீறப்படுகிறது’ ஐ.நா

ஐ.நா தலைவர் “காசாவில் நாம் கண்டுவரும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் தெளிவான மீறல்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாக” கூறியுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், குடிமக்களை “மனித கேடயங்களாக” பயன்படுத்துவதையும், வெளியேற்ற உத்தரவை அடுத்து தெற்கு காசா மீது குண்டுவீசுவதையும் கண்டித்து கருத்து தெரிவித்தார்.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் “வெற்றிடத்தில் நடக்கவில்லை” என குட்டெரெஸ் கூறியதை அடுத்து இஸ்ரேலிய தூதர்கள் ஆவேசமடைந்து பதிலழித்துள்ளனர்.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தனது உரையில் கூறிய “மூடத்தனமான” கருத்துகளுக்காக அவர் பதவி விலக வேண்டும் என இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

” காசாவுக்கு போதுமான உதவிகள் கிடைக்கவில்லை” என்றும், எட்டு உதவி லாரிகள் மட்டுமே இன்று காஸாவுக்குள் நுழைந்ததாகவும் பாலஸ்தீனிய செஞ்சிலுவை இயக்கம் தெரிவித்துள்ளது.

ஹமாஸால் கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் காசா பகுதியில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் நான்கு பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் காசா மீது கடுமையான குண்டுவீச்சைத் தொடங்கியது, அக்டோபர் 7 முதல் கிட்டத்தட்ட 5,800 பேர் அளவு இறந்திருக்கலாம் என ஹமாஸின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் செய்தி ஊடகங்கள் 8 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது என தெரிவித்துள்ளன.

ஹமாஸ் ஆயுததாரிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.