காசாவில் போர்நிறுத்தம் குறித்து அவசர ஆலோசனை!

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அப்போது மனிதாபிமான முறையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே போர் தொடங்கி 32 நாட்களாகி விட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த போரில் அப்பாவி குழந்தைகள், பொதுமக்கள் பலியாகி வருவதால் போரை உடனே நிறுத்த வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
போரை நிறுத்தக்கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என ஜோபைடன் இஸ்ரேல் பிரதமரிடம் வலியுறுத்தினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிணைக் கைதிகளை பாதுகாப்பாக மீட்பது மேலும் இரு தலைவர்களும் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை பாதுகாப்பாக மீட்பது குறித்தும் விவாதித்துள்ளனர்.

பிணைக் கைதிகளாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறும், காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டதை வரவேற்பதாகவும் ஜோபைடன் தெரிவித்துள்ளார். என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன..

Leave A Reply

Your email address will not be published.