மாந்தை கிழக்கு பிரதேச செயலக சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமும் விளையாட்டு நிகழ்வும்.

இன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலக சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமும் விளையாட்டு நிகழ்வும் மாந்தை கிழக்கு மாற்றுத் திறனாளிகள் அமைப்பு பாலிநகர் கிராம பிரிவில் வடமாகாண சமூக சேவை சேவைத் திணைக்களத்தின் நிதி அனுசரனையுடனும் பிரதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நிதி அனுசரணையுடனும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் செல்வி ந.ரஞ்சனா அவர்களும் சிறப்பு விருந்தினராக சமூக சேவை உத்தியோகத்தர் திரு.சி.சரூபன் அவர்களும் கௌரவ விருந்தினராக திரு குகனேந்திரம் ஐயா அவர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு நிகழ்வு இடம்பெற்று வெற்றி பெற்ற வீர,வீராங்கனைகளுக்கு பரிசில் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.

 

Leave A Reply

Your email address will not be published.