மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பல்வீர் சிங் விவகாரம்..!! தமிழக அரசின் அதிரடி முடிவு..!!

பல்பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையை தொடங்க சிபிசிஐடி போலீஸாருக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

பல்வீர் சிங் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வந்தார். அம்பாசமுத்திரம் கோட்ட இவர் விசாரணை கைதிகளை மிகவும் கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.

விசாரணை கைதிகளின் பல்லை அவர் பிடுங்கியதாக பெரும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து அது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த புகார்களை அடுத்து பல கட்ட விசாரணைகள் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த வழக்கு உயர்மட்ட விசாரணை குழுவின் பரிந்துரையின் பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பல்வீர் சிங், ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் இருந்து வந்தது, மேலும், அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசு மற்றும் யு.பி.எஸ்.சி. தேர்வாணையத்துக்குசி.பி.சி.ஐ.டி. போலீசார் கடிதம் அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், பல்வீர் சிங் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையை துவங்க சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.