யாழ். இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை மாணவி மாவட்டத்தில் முதலிடம்!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை மாணவி முதலிடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளார்.

ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா என்ற மாணவியே 196 புள்ளிகளைப் பெற்று யாழ். மாவட்டத்தில் அதிகூடிய புள்ளியைப் பெற்று வரலாற்றில் முதல் தடவையாக யாழ். இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளதார்.

இம்முறை இந்தப் பாடசாலையில் இருந்து 110 மாணவர்கள் பரீட்சைக்குத் தோன்றிய நிலையில், 35 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டி சித்தி அடைந்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.

அதிலும் வரலாற்றில் முதன்முதலாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகூடிய புள்ளியைப் பெற்று யாழ். இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை மாணவி பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது என யாழ்ப்பாணம் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலையின் அதிபர் சிவந்தினி வாகீசன் தெரிவித்தார்,

சாதனை படைத்த மாணவி வனிஷ்கா தனது பெற்றோருடன் இணைந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

“என்னைப் போன்று எதிர்காலத்தில் மாணவர்கள் அதிக புள்ளியைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்க்க வேண்டும். எதிர்காலத்தில் விஞ்ஞானியாக வந்து இலங்கைக்குப் பெருமை சேர்ப்பதே எனக்கு இலக்கு.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.