அங்கீகாரம் பெறாத ஆண்டிபயாடிக் மருந்துகளால் ஆபத்து..!

நாட்டில் விற்பனையாகும் பல மருந்துகள் போலியானவை என்று தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மற்றும் மாத்திரைகள் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பல போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அங்கீகரிக்கப்படாத 70 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்டிபயாடிக் FDC மருந்து வகைகள் சாதாரணமாக மருந்து கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் காய்ச்சல், சளி ஆகியவற்றிற்காக வழங்கப்பட்டு வருவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த மருந்துகள் உத்தரகாண்ட் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பொதுமக்கள் பாக்டீரியா தொற்றுக்கு மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

ஆனால், சில நேரங்களில் மருந்து கடைகளில் கிடைக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளை வைரஸ் தொற்றுக்கும் பயன்படுத்துகின்றனர். இதனால், பெரிதளவில் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.