பாரிஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல் : ஜெர்மன் சுற்றுலா பயணி உயிரிழப்பு, இருவருக்கு காயம் (Video)

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில், ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர். 20 வயதுக்கு இடைப்பட்ட பிரான்ஸ் பிரஜையான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார், மேலும் தாக்குதலின் போது “அல்லாஹு அக்பர்” என்று கூச்சலிட்டதாக நம்பப்படுகிறது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இந்தச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என உடனடியாகக் கண்டித்ததோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சந்தேக நபர் இதற்கு முன்னர் 2016 இல் மற்றுமொரு தாக்குதலுக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2020 இல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். தாக்குதலின் போது அவர் கண்காணிப்பில் இருந்ததோடு , மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.