தாமிரவருணியில் நீர்வரத்து அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

தாமிரவருணி ஆற்றில் அதிகரிக்கும் நீர் வரத்து காரணமாக தூத்துக்குடி மாவட்ட தாமிரவருணி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல், அரியநாயகிபுரம் அணைக்கட்டிலிருந்து தாமிரவருணி ஆற்றில் 5,400 கன அடி நீர் தற்போது வந்து கொண்டிருக்கிறது. மேலும், கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரவருணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ வேண்டாம்.

மேலும், ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட ஸ்ரீவைகுண்டம், ஏரல், திருச்செந்தூர் வட்டாட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.