திருமணத்திற்குத் தயாராகும் 112 வயது மலேசிய பாட்டி.

மீண்டும் திருமணம் செய்துகொள்வதில் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளார் மலேசியாவைச் சேர்ந்த 112 வயதுப் பாட்டி.

ஏற்கனவே 7 மூறை திருமணம் செய்திருக்கும் சித்தி ஹவ்வா ஹுஸினுக்கு (Siti Hawa Hussin) 4 பிள்ளைகள், 19 பேரப் பிள்ளைகள், 30 கொள்ளுப் பேரப்பிள்ளைகள்.

இப்போதும் வரன் வந்தால் நிராகரிக்கப்போவதில்லை என்று அவர் சொன்னதாக The Star செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த அவர், தமது கணவர்களில் சிலர் காலமாகிவிட்டதாகும் சிலரை விவாகரத்துச் செய்ததாகவும் கூறினார்.

சித்தி ஹவ்வா தமது ஆக இளைய மகனுடன் வசிப்பதாக The Star தெரிவித்தது.

அவரது நீண்ட ஆரோக்கியமான வாழ்வின் ரகசியம்?

உடல்நலத்தைப் பார்த்துக்கொள்வதும் சோற்றில் குழம்பைச் சேர்த்துக் கொள்ளாததும் தான் என்கிறார் அவர்.

ஒரு வேளை உணவைக்கூட சித்தி ஹவ்வா தவறவிடுவதில்லை.

தினமும் 5 வேளை தொழுகிறார்… சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்!

Leave A Reply

Your email address will not be published.