தாய் கழுத்தறுத்துப் படுகொலை; சந்தேகத்தில் இளைய மகள் கைது.

தாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரது மகள் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கஹவத்தை, வெள்ளந்துறையில் கடந்த 13ஆம் திகதி, வினிதா ஜயசுந்தர என்ற 71 வயதுடைய பெண் வீட்டருகே கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் இளைய மகள் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று கஹவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

38 வயதான திருமணமாகாத பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இவர் கஹவத்தை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றுகின்றார்.

உயிரிழந்த பெண்ணின் இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் கஹவத்தை பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாரத்ன பிள்ளைகளையும் உறவினர்களையும் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து சாட்சியங்களைப் பதிவு செய்தனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட மகள் தனது தாயை வீட்டுக்குள் கழுத்தறுத்துக் கொலை செய்து சில மணித்தியாலங்களின் பின்னர் சடலத்தை வீட்டின் பின்னால் கொண்டு சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பின்னர், வீட்டினுள் சிதறிக் கிடந்த இரத்தக்கறைகளை அகற்றுவதற்காக வீட்டை முழுமையாகக்கழுவிஅவர்சுத்தம்செய்துள்ளார்என்றும்பொலிஸார்தெரிவிக்கின்றனர்.கொலையைச்செய்துவிட்டு,முற்பகல்11.40மணிக்குதனதுபணியிடத்துக்குச்சென்றசந்தேகநபர்,மாலை3.40மணியளவில்அலுவலகத்திலிருந்துவீடுதிரும்பியிருக்கலாம்என்றும்பொலிஸார்கூறுகின்றனர்.அதன்பின்னர்சந்தேகநபர்கஹவத்தைபொலிஸாருக்குத்தொலைபேசிஅழைப்பைமேற்கொண்டுதாய்கொல்லப்பட்டுள்ளார்என்றசெய்தியைத் தெரியப்படுத்தியுள்ளார்.
இரத்தினபுரி மோப்ப நாய்ப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் போது சந்தேகநபரின் கைக்கடிகாரம் இறந்த தாயின் சடலத்திலிருந்து சில அடி தூரத்தில் கிடந்தது என்றும், மோப்ப நாய் வீட்டை விட்டு வெளியேறவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் வெளிவரும் உண்மைகளின் அடிப்படையில் வெளியார் ஒருவர் இதனைச் செய்திருக்க முடியாது எனத் தோன்றியதால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று கஹவத்தை பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாரத்ன தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.